மதம் மாறிய லிவிங்ஸ்டன்

மதம் மாறிய லிவிங்ஸ்டன்

1 mins read
000a8163-cee1-47bf-a80f-e831005ed404
லிவிங்ஸ்டன். - படம்: ஊடகம்

‘டார்லிங் டார்லிங்’ படம் மூலம் அறிமுகமான லிவிங்ஸ்டன் இந்து மதத்திற்கு மாறியுள்ளார்.

நாயகனாக மட்டுமன்றி குணசித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் 150 படங்களுக்குமேல் நடித்துள்ளார் லிவிங்ஸ்டன். ‘என் புருஷன் குழந்தை மாதிரி’, ‘எங்களுக்கும் காலம் வரும்’ உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்.

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த லிவிங்ஸ்டன் தற்போது இந்து மதத்திற்கு மாறி இருக்கிறார். பல மாதங்களுக்கு முன்பே அவர் மாறிவிட்டிருந்தாலும் அதனை இப்போதுதான் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “இத்தனை ஆண்டுகள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றினேன். எனக்கு இந்த மதம் தற்போது அயர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதனால், நான் இந்து மதத்திற்கு மாறியுள்ளேன். எனக்குக் கடவுள் கிருஷ்ணரைப் பிடிக்கும். அதனால், ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ அமைப்பில் இணைந்திருக்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்