‘சலார்’ படத்தில் இணைந்தார் யஷ்

1 mins read
bd90b5cc-cd4a-4b01-9fd8-798dbaa88dc0
பிரசாந்த் நீல், பிரபாஸ், யஷ். - படம்: ஊடகம்

பிரபாஸ் நடித்திருக்கும் ‘சலார்’ படத்தில் பிரித்விராஜுடன் யஷ்ஷும் நடித்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

‘கே.ஜி.எஃப்’ படத்தின் இரண்டு பாகங்களை இயக்கிய பிரசாந்த் நீல் ‘சலார்’ படத்தையும் இயக்கி உள்ளார். இப்படம் இம்மாதம் 22ஆம் தேதி வெளியாக உள்ளது.

பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்த பெண் குழந்தை நட்சத்திரம் அண்மையில் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது, “இந்தப் படத்தில் பிரபாஸ், பிரித்விராஜ், யஷ் அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது,” என்று கூறியுள்ளார்.

இதன்மூலம் இந்தப் படத்தில் யஷ் நடித்திருப்பது உறுதியாகி உள்ளது.

‘விக்ரம்’ பட ‘ரோலக்ஸ்’ சூர்யா கதாபாத்திரம் போல இதையும் ரகசியமாக வைத்திருந்து படம் வெளியாகும்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று படக்குழு நினைத்திருந்த நிலையில் குழந்தை நட்சத்திரம் மூலமாக இந்தச் செய்தி வெளிப்பட்டு விட்டதால் வருத்தத்தில் படக்குழுவும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியும் தந்தது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி