மலையாள நடிகர் மம்முட்டியின் அடுத்த அவதாரம்

மலையாள நடிகர் மம்முட்டியின் அடுத்த அவதாரம்

1 mins read
5b3ed573-519a-498d-893d-c069ff5f7614
மம்முட்டி. - படம்: ஊடகம்

மம்முட்டி `காதல் - தி கோர்` திரைப்படத்தில் தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருந்தார். தற்பொழுது ‘டைம் டிராவல்’ படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார்.

மலையாளத்தில் உணர்வுபூர்வமான படங்களும் நகைச்சுவை, பேய்ப் படங்களும் அதிக அளவில் வெளியானாலும் அறிவியல் சம்பந்தப்பட்ட படங்கள் என்று பார்த்தால் தமிழைவிட மலையாளத்தில் குறைவு. இந்நிலையில் முதன்முறையாக மலையாளத்தில் டைம் டிராவலை மையப்படுத்தி ஒரு திரைப்படம் உருவாக இருக்கிறது.

இதில் கதாநாயகனாக மம்முட்டி நடிக்க இருக்கிறார் என்பதுதான் ஆச்சரியமான தகவல். ஏற்கெனவே ‘ஆவாஸ்யுகம்’, ‘தி மேல் கோஸ்ட்’ என வித்தியாசமான கதைக்களங்களில் படங்களை இயக்கிய கிருஷந்த் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.

திரைத்துறையில் அரை நூற்றாண்டுப் பயணம், மூன்று தேசிய விருதுகள் மற்றும் பெரும் ரசிகர் பட்டாளம் என்று நெடிய பாரம்பரியம்கொண்ட எந்த இந்திய நடிகரும் தன்பாலின ஈர்ப்பாளராக நடிக்க அஞ்சும் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி