கோபத்தில் கொந்தளித்த கீர்த்தி பாண்டியன்

1 mins read
027247a6-3562-469b-9a7d-edc5b4587dbf
கீர்த்தி பாண்டியன், ரங்கநாதன். - படம்: ஊடகம்

கீர்த்தி பாண்டியன், அவருடைய கணவர் அசோக் செல்வன் இருவரும் நடித்திருக்கும் வெவ்வேறு படங்கள் இன்று வெளியாகின்றன. அதுபற்றி ரங்கநாதன் கேட்ட விவகாரமான கேள்விக்கு கோபத்துடன் பதிலளித்தார் கீர்த்தி பாண்டியன்.

‘கண்ணகி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் கீர்த்தி பாண்டியன். அவரின் கணவர் அசோக் செல்வன் ‘சபாநாயகன்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் இன்று வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில் ‘கண்ணகி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது செய்தியாளர் பயில்வான் ரங்கநாதன், நடிகை கீர்த்தி பாண்டியனிடம், “வீட்டுக்குள்ளதான் கணவன் மனைவி சண்டை என்றால், இந்த வாரம் உன் படம் வெளியாகிறது. உன் கணவர் அசோக் செல்வனின் படமும் வெளியாகிறது. இதில் எந்த படம் வெற்றி பெரும்?” என்று கேள்வி எழுப்பினார். இதைக் கேட்டதும் கோபமான கீர்த்தி பாண்டியன், “எங்கள் வீட்டிற்கு வந்து பார்த்தீர்களா நாங்கள் சண்டைபோட்டதை? எங்கள் இருவருக்கிடையே போட்டியும் இல்லை, சண்டையும் இல்லை,” என்று கோபமாகப் பதிலளித்தார்.

இருந்தாலும் கணவன் - மனைவி நடிப்பில் உருவாகிய படங்கள் ஒரே நாளில் மோதவுள்ளது எந்த அளவிற்கு சாதகமாக இருக்கப்போகிறது? என்னதான் குடும்பம் வேறு, தொழில் வேறு என்றாலும் இருவரில் யாருடைய படம் வெற்றி பெறப்போகிறது என்று கேள்வி எழுப்பி வருகிறது கோலிவுட்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி