அசோக் செல்வன் நடித்திருக்கும் ‘சபாநாயகன்’ படம் டிசம்பர் 22க்கு தள்ளிப்போனது.
நேற்று ‘அகோரி’, ‘பைட் கிளப்’, ‘கண்ணகி’, ‘பாட்டி சொல்லை தட்டாதே’, ‘சபாநாயகன்’, ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’, ‘தீதும் சூதும்’ ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தன. கணவன், மனைவியான அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரது படங்களும் வெளியீட்டில் போட்டியிட இருந்தன. இந்நிலையில் அசோக் செல்வன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மழை காரணமாக தாமதம் ஆனது. அதனால் தணிக்கைக்கு அனுப்ப முடியவில்லை. அனைத்தும் முடிவடைந்து படத்தை டிசம்பர் 22ஆம் தேதி வெளியிடுகிறோம்,” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

