அஜித்துடன் மீண்டும் இணைந்தார் அர்ஜுன்

1 mins read
7275fc46-8e03-4bd1-a05a-054dd676aaab
விடாமுயற்சி படக்குழு. - படம்: ஊடகம்

அஜித்தும் அர்ஜூனும் இணைந்து நடித்த ‘மங்காத்தா’ படத்தையடுத்து ‘விடாமுயற்சி’ படத்திலும் இவர்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித்துடன் நடிகை திரிஷாவும் அங்கு சென்றுள்ளதால் திரிஷா இந்தப் படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்கும் ஆரவ் தனது சமூக வலைத்தளத்தில் அஜித் மற்றும் அர்ஜுனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி