‘ஜோதிடம் பார்த்துதான் சலார் படத்தை வெளியிடுகிறோம்’

‘ஜோதிடம் பார்த்துதான் சலார் படத்தை வெளியிடுகிறோம்’

1 mins read
b807fed7-e1d8-44b9-8fd6-acebb41f397d
பிரித்விராஜ், பிரபாஸ், ராஜமவுலி. - படம்: ஊடகம்

‘சலார்’ படத்தின் வெளியீட்டிற்கு ஜோதிடம் பார்த்து டிசம்பர் 22ஆம் தேதி வெளியிடுகிறோம் என்று படத்தின் தயாரிப்பாளர் கிரகந்தூர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் எங்களுடைய அதீத நம்பிக்கையின் அடிப்படையில் இப்படத்தின் வெளியீடடுத் தேதியை அறிவித்தோம்.

“கடந்த பல ஆண்டுகளாக இந்த முறையில்தான் எங்கள் தேதிகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம்.

“எதிர்காலத்திலும் ஜோதிட அடிப்படையிலேயே நாங்கள் வெளியீட்டுத் தேதியை அறிவிப்போம். அந்த அடிப்படையில்தான் ‘சலார்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை டிசம்பர் 22ஆம் தேதி என்று அறிவித்தோம்,” என்றார்.

இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பிரபாஸ் கலந்துகொள்ளாததால் காணொளி பேட்டிகளை மட்டும் வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். ‘சலார்’ படக்குழுவினரை ராஜமவுலி பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கேட்டுள்ளார்களாம்.

இதற்கு ராஜமவுலி சம்மதம் சொல்வாரா என்பது இன்னும் தெரியவில்லை. ஒருவேளை அவர் சம்மதித்தால் அதை மட்டுமே வைத்து படத்தின் விளம்பர நிகழ்ச்சியை முடித்துக் கொள்ள திட்டமிட்டு இருக்கிறதாம் படக்குழு.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி