படப்பிடிப்பில் அஜித் எடுத்த புகைப்படங்கள்

1 mins read
10ba42e6-506a-4b4a-8f3f-7034ad7d1256
அஜித். - படம்: ஊடகம்

அஜித்திற்கு புகைப்படம் எடுப்பது என்றால் மிகவும் பிடிக்கும் என்பது தெரிந்த சங்கதிதான்.

இந்நிலையில், ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்புத் தளத்தில், தான் எடுத்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் தனது மேலாளர் மூலம் பகிர்ந்துள்ளார்.

அவற்றைக் கண்டு ரசித்துள்ள அஜித்தின் ரசிகர்களும் அவற்றைப் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர். ‘புகைப்படங்கள் மீதான அஜித்தின் காதல்’ என்ற குறிப்புடன் அவர் இப்படங்களை பகிர்ந்துள்ளார்.

நடிகர் அர்ஜுன், நடிகை ரெஜினா, இயக்குநர் மகிழ் திருமேனி, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஆகியோரின் படங்களைத்தான் முதற்கட்டமாக வெளியிட்டுள்ளார் அஜித்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்