அயலானுக்கு குரல் கொடுத்த சித்தார்த்

1 mins read
5acbf272-f0cf-48e6-813e-10017351ebe2
இயக்குநர் ரவிகுமாருடன் சித்தார்த். - படம்: ஊடகம்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தில் இடம்பெற்றுள்ள வேற்றுகிரகவாசி கதாபாத்திரத்திற்குப் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார் நடிகர் சித்தார்த்.

பின்னணிக் குரல் பதிவின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரவிகுமார் இயக்கி உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி இப்படம் திரை காண உள்ளது.

‘அயலான்’ திரைப்படம் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எதிர்வரும் பொங்கல் பண்டிகையின்போது உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகும்.

இந்நிலையில் ‘தி வாய்ஸ் ஆஃப் அயலான்’ என்ற அறிவிப்பு குறித்து ரசிகர்கள் பலவிதமாக யூகித்து சில பெயர்களை இட்டு வந்தனர்.

அந்த அயலான் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்திருக்கிறார் என்பதை உற்சாகத்துடன் அறிவிக்கிறோம் என்று படத்தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்