புது தொழில் தொடங்கிய அபர்ணா

1 mins read
ea044933-f738-4d22-b91b-abb3973cc2df
அபர்ணா பாலமுரளி. - படம்: ஊடகம்

நயன்தாராவைத் தொடர்ந்து நடிகை அபர்ணா பாலமுரளியும் தொழில்துறையில் கால்பதித்துள்ளார்.

தனது நெருக்கமான நண்பர்களுடன் இணைந்து ‘கிப்ஸ்வே’ எனப்படும் புதிய ஆடை தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார் அபர்ணா.

தமிழில் ‘எட்டுத்தோட்டாக்கள்’ படம் மூலம் அறிமுகமான இவர், பின்னர் ‘சூரரை போற்று’ படத்தின் மூலம் பிரபலமானார். மேலும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் இவருக்குக் கிடைத்தது.

வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பதாகவும் தற்போது ‘தங்கம்’ என்கிற மலையாளப் படத்தில் நடித்துள்ளதாகவும் அபர்ணா கூறியுள்ளார்.

இந்நிலையில், ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள இவருக்கு, பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிகின்றன. குறிப்பாக, நயன்தாராவும் ‘உங்களை நினைத்து பெருமை அடைகிறேன். புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளாராம்.

குறிப்புச் சொற்கள்