‘பூஜாவுக்கு கொலை மிரட்டல் ஏதும் வரவில்லை’

1 mins read
23fc3510-d78d-417d-aa33-3ffe299e6872
பூஜா ஹெக்டே. - படம்: ஊடகம்

பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக வெளியான தகவலை அவரது தரப்பு மறுத்துள்ளது.

அண்மையில் துபாயில் நடைபெற்ற கடைத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பூஜா ஹெக்டே. அப்போது அங்கிருந்த ஒருவருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்றும் அதையடுத்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், பூஜாவின் சமூக வலைத்தளப் பக்கங்களை நிர்வகிக்கும் குழுவினர், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று பதிவிட்டுள்ளனர்.

குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு தரப்பு இத்தகைய வதந்தியைப் பரப்பி உள்ளதாகவும் பூஜா தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தியில் சல்மான் கானுடன் நடித்த ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ படத்தை அடுத்து, ‘தேவி’ என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார் பூஜா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்