இந்தித் திணிப்பை எதிர்க்கும் போராளியாக சூர்யா

இந்தித் திணிப்பை எதிர்க்கும் போராளியாக சூர்யா

1 mins read
4327b9a1-57b0-411a-8d9c-3f3cbdd1ba20
சூர்யா. - படம்: ஊடகம்

சுதா கோங்குரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 43’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுக்கும் இளையர் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் சூர்யா. இது தொடர்பாக இணையத்தில் சில புகைப்படங்கள் வலம் வருகின்றன.

கடந்த 1965ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். மாணவர் தலைவர் ராஜேந்திரன் அந்தப் போராட்டத்தில் மரணமடைந்தார்.

அவருடன் சூர்யா இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்கள்தான் தற்போது சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. இந்தக் கதை, கதாபாத்திரங்களுக்காக சுதா கோங்குரா பெரும் ஆய்வுகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் தாக்கத்தை அந்தக் கட்சிகளைப்பற்றி காட்சிப்படுத்தாமல் விவரிக்க உள்ளாராம். அதற்கேற்ப திரைக்கதை அமைக்கப்பட்டு வருவதாகத் தகவல்.

இம்முறை படம் முழுவதும் அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் அதனால் இப்படம் நிச்சயம் சர்ச்சையை கிளப்பும் என்றும் கூறப்படுகிறது.

இத்தகைய வசனங்கள் இடம்பெறுவதற்கு சூர்யாவும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் எனினும் தேவையற்ற வசனத் திணிப்பு இருக்கக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்