பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்த மடோனா

1 mins read
4caacff6-7867-49fe-b28a-729688fb1495
மடோனா செபாஸ்டியன். - படம்: ஊடகம்

பிரபுதேவா நடிக்கும் புதுப்படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளனர். இதில் நாயகியாக மடோனா செபாஸ்டியன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

யாஷிகா ஆனந்த், யோகி பாபு, அபிராமி, ஓய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விநாயக மூர்த்தி இசையில் சக்தி சிதம்பரம் இயக்கும் இந்தப் படத்திற்கு ‘ஜாலியோ ஜிம்கானா’ என பெயர் வைத்துள்ளனர்.

‘லியோ’ படத்தில் நடித்த பிறகு கோடம்பாக்கத்தில் மடோனாவுக்கு புது மவுசு ஏற்பட்டுள்ளது. நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்து வருவதாகச் சொல்கிறார்.

தனக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மடோனாவுக்கும் இருக்க வேண்டும் என பிரபுதேவா இயக்குநர் தரப்பிடம் கூறியுள்ளாராம்.

குறிப்புச் சொற்கள்