வருத்தத்தை மறக்கச் செய்யும் நல்ல வாய்ப்பு: மெஹ்ரின்

வருத்தத்தை மறக்கச் செய்யும் நல்ல வாய்ப்பு: மெஹ்ரின்

1 mins read
16768911-ea2c-4afc-b7e0-de390fae622c
மெஹ்ரின். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

‘நெஞ்சில் துணிவு இருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இந்தி நடிகை மெஹ்ரின் ஃபிர்ஸாடா, பின்னர் தனுஷுடன் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால் மூன்று ஆண்டுகளாக அவர் கோடம்பாக்கம் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.

இந்நிலையில், ‘இந்திரா’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் வசந்த் ரவி ஜோடியாக நடித்து வருகிறார். இதை சபரீஷ் நந்தா இயக்குகிறார்.

“இந்திரா கதாபாத்திரத்தில் நான்தான் நடிக்கிறேன். மூன்று ஆண்டுகள் தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தத்தை அடியோடு மறக்கச் செய்யும் வகையில் நல்ல கதைக்களமும் கதாபாத்திரமும் அமைந்துள்ளன.

“நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ஐரா’, ‘நவரசா’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர் சபரிஷ்நந்தா. இந்தப் படத்தை மிகக் கச்சிதமான படைப்பாக உருவாக்கி வருகிறார்,” என்கிறார் மெஹ்ரின்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்