தனுஷ் இயக்கும் படத்தில் ஒப்பந்தமான அனிகா

தனுஷ் இயக்கும் படத்தில் ஒப்பந்தமான அனிகா

1 mins read
776ff78e-8510-4a50-8199-a3b360fb8dd1
அனிகா. - படம்: ஊடகம்

இளம் நாயகி நடிகை அனிகா சுரேந்திரன், அடுத்து தனுஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். இது தனுஷ் தன் சகோதரி மகனை நாயகனாக வைத்து உருவாக்கும் படம்.

நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ள அனிகா தற்போது தெலுங்கு, மலையாளப் படங்களில் வருகிறார்.

இந்நிலையில், தனுஷ் இயக்கத்தில் நடிப்பது இதுவரை தனக்குக் கிடைத்த வாய்ப்புகளில் ஆகப் பெரியது என்கிறார்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள உணர்வுபூர்வமான காட்சிகளில் கச்சிதமாக நடித்தால் தமக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும் என்று நம்புவதாகச் சொல்கிறார் அனிகா.

குறிப்புச் சொற்கள்