மீண்டும் மாணவனாக மாறிய சிவகார்த்திகேயன்

1 mins read
eb0b14ae-8e48-437d-82b4-7fe3f44ae81d
சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

கமல்ஹாசன் தயாரிக்கும் ‘எஸ்.கே.21’ படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் பள்ளி மாணவன் வேடத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ‘எஸ்.கே.21’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் ‘எஸ்.கே.21’ படத்திற்காக சிவகார்த்திகேயன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

அதில் மீசை தாடி இல்லாமல் பள்ளியில் படிக்கும் மாணவனைப்போல காட்சியளிக்கும் சிவகார்த்திகேயனை பார்த்த ரசிகர்கள், 7 ஆண்டுகளுக்கு முன் ‘ரெமோ’ படத்தில் பார்த்தது போல் சிவகார்த்திகேயன் உள்ளதாக ஒப்பிட்டு வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி