‘விடாமுயற்சி’ படம் ரூ.250 கோடிக்கு விற்பனை

1 mins read
3b42f7e6-248c-41f4-9921-83fbd109df8b
‘விடாமுயற்சி’ படத்தில் அஜித். - படம்: ஊடகம்

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு முடிவதற்குள் ‘சாட்டிலைட்’, ‘டிஜிட்டல்’ உரிமையை ரூ.250 கோடிக்கு விற்பனை செய்துள்ளது லைகா நிறுவனம்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் அங்குதான் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் 250 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது 350 கோடி ரூபாய் செலவில் உருவாகும் ‘விடாமுயற்சி’ படத்தின் இந்த வியாபாரம் காரணமாக படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே 75 விழுக்காட்டு செலவுத் தொகையை எடுத்து விட்டது தயாரிப்பு நிறுவனம். மேலும், இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரவுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்