தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருப்பதியில் மலையேறிய தீபிகா படுகோன்

1 mins read
5c914108-a42f-4833-9468-ad56d4a7072d
திருப்பதி மலையடிவாரத்தில் நடந்து சென்ற தீபிகா படுகோன். - படம்: ஊடகம்
multi-img1 of 2

திருப்பதிக்குச் சென்ற தீபிகா திடீரென்று காரில் இருந்து இறங்கி மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந்தி நடிகை தீபிகா படுகோன் ரித்திக் ரோஷனுடன் நடித்த ‘பைட்டர்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தீபிகா தனது தங்கை அனுஷாவுடன் நேற்று முன்தினம் திருப்பதிக்குச் சென்றார். அலிபிரி நடைபாதை அருகே தனது காரில் வந்த தீபிகா திடீரென காரில் இருந்து இறங்கினார்.

பின்னர் தனது தங்கையுடன் நடைபாதையில் நடந்து சென்றார். தீபிகா நடை பாதையில் நடந்து செல்வதைக் கண்ட பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து காவல் அதிகாரிகள் தீபிகாவை பலத்த பாதுகாப்புடன் திருப்பதி மலைக்கு அழைத்துச் சென்றனர். மலைப்பாதையில் உள்ள கோவில்களில் கற்பூரம் ஏற்றி தீபிகா படுகோன் தரிசனம் செய்தார்.

3 மணி நேரம் நடந்து திருப்பதி மலையை அடைந்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். அன்று இரவு திருப்பதி மலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

மறுநாள் காலை சிறப்பு தரிசனத்தில் தீபிகாவும் அவரது தங்கை அனிஷாவும் ஏழுமலையானை தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி