தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுவில் இருந்து மீண்டுவிட்டேன்: ‌ஷ்ருதிஹாசன்

1 mins read
7aea1b02-a66e-4bbb-9db2-54886b4dc500
ஷ்ருதிஹாசன். - படம்: ஊடகம்

மீண்டும் தமது மதுப்பழக்கம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார் நடிகை ஷ்ருதி ஹாசன்.

இவரது நடிப்பில் வரும் 22ஆம் தேதி ‘சவால்’ திரைப் படம் வெளியாக உள்ளது.

இப்படத்தில் பிரபாஸ் நாயகனாகவும் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பிரசாந்த் இயக்கி உள்ளார்.

இந்நிலையில், ஷ்ருதி அளித்துள்ள அண்மைய பேட்டியில், தாம் எட்டு ஆண்டு காலம் மதுவுக்கு அடிமையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

“அக்குறிப்பிட்ட எட்டு ஆண்டுகளில் ஏதேனும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றால் நிதானமாக இருப்பது எனக்கு கடினமாக இருக்கும். நண்பர்களுடன் இணைந்து மது அருந்துவதை விரும்புவேன்.

“மது என்னைப் பல வகையிலும் ஆட்டிப்படைத்தது. பின்னர் அப்பழக்கத்தில் இருந்து எப்படியோ மீண்டுவிட்டேன்,” என்று ஷ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

அந்தக் காலகட்டத்தில் நடந்தவை குறித்து தாம் எந்த வகையிலும் வருந்தவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், இதுவரை ஒருமுறைகூட போதைப் பொருள்களைப் பயன்படுத்தி யதே இல்லை எனக் கூறியுள்ளார்.

“மதுபுட்டியுடன் காணப்பட்டது என் வாழ்க்கையின் ஒரு கட்டம். என்னைப் போல் பலர் இத்தகைய காலகட்டத்தைக் கடந்து வந்துள்ளனர்,” என்று ஷ்ருதிஹாசன் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்