பார்த்திபன் படத்தில் ஆஸ்திரேலிய பாடகி

பார்த்திபன் படத்தில் ஆஸ்திரேலிய பாடகி

1 mins read
ee3125e8-2e9a-4901-9cf5-f6da59a2de52
ஜானகி ஈஸ்வர். - படம்: ஊடகம்

பார்த்திபன் நடிக்கும் புதுப் படத்தில் இளம் பாடகி ஒருவரை அறிமுகம் செய்கின்றனர்.

டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜானகி ஈஸ்வர் பாடகியாக அறிமுகம் ஆகிறார்.

அண்மையில் இமானின் இசை நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அப்போதுதான் பதின்ம வயதில் உள்ள ஜானகியைச் சந்தித்துள்ளார் இமான். அவரது குரல்வளம் அசத்தலாக இருந்ததாம்.

இதையடுத்து பார்த்திபன் இயக்கத்தில் உருவாகும் ‘டீன்’ என்ற படத்தில் ஜானகியைப் பாட வைத்துள்ளார் இமான்.

குறிப்புச் சொற்கள்