‘பிக்பாஸ்’ பரணி நடிக்கும் புதுப்படம்

‘பிக்பாஸ்’ பரணி நடிக்கும் புதுப்படம்

1 mins read
a16a23b7-dee7-4175-8319-9b20acdf25cf
பரணி. - படம்: ஊடகம்

‘நாடோடிகள்’ படத்தின் மூலம் பிரபலமான பரணி, பின்னர் ‘பிக்பாஸ்’ பரணி எனப் பெயர் எடுத்தார்.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் தமிழ்த் திரையுலகில் மீண்டும் தனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்ற அவரது எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது.

நீண்ட காலம் வாய்ப்பின்றி புலம்பிக் கொண்டிருந்தவருக்கு இப்போது விடிவுகாலம் பிறந்திருக்கிறது.

எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ என்ற நாவலை மையமாக வைத்து வெளியான ‘உலகம்மை’ என்ற படத்தின் இயக்குநர் ஜெயபிரகாஷ் இயக்கும் புதுப்படத்தில் பரணிதான் கதாநாயகனாம்.

மிக அழுத்தமான இக்கதையில் தமக்கு கனமான கதாபாத்திரம் அமைந்துள்ளதாகக் கூறுகிறார் பரணி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்