‘மதிமாறன்’ படத்தில் இவானா

‘மதிமாறன்’ படத்தில் இவானா

1 mins read
aa13242a-9218-4c10-bff6-c0416abbad94
இவானா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

நடிகை இவானா நடிக்கும் ‘மதிமாறன்’ படத்தின் முதல் சுவரொட்டி வெளியாகி இருக்கிறது.

வெங்கட் செங்குட்டுவன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கும் ‘மதிமாறன்’ படத்தின் முதல் சுவரொட்டி வெளியாகி உள்ளது.

படம் பற்றி இவானா பேசுகையில், “எனக்காகவே இந்தக் கதையை எழுதியதாக இயக்குநர் சொன்னபோது, இதில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். படத்தின் கதையும் என்னை இதில் நடிக்கத் தூண்டியது,” என்றார்.

‘புத்தகத்தின் அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே’ என்பது உலகின் மிகச்சிறந்த பழமொழி. அதுதான் இப்படத்தின் மையக் கருத்து.

தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகன் வேடத்தில் வெங்கட் செங்குட்டுவன் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் தற்போது வெளியீட்டுக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்புச் சொற்கள்