தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கார்த்தி எடுத்த அதிரடி முடிவு

1 mins read
765fc2d0-bfb3-4f9d-a47f-aa506506c68b
கார்த்தி. - படம்: ஊடகம்

கார்த்தி நடித்திருந்த ‘ஜப்பான்’ படம் தோல்வி அடைந்ததையடுத்து கார்த்தி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

கார்த்தி தன்னுடைய 25வது படமான ‘ஜப்பான்’ படத்தில் ராஜு முருகனுடன் கூட்டணி அமைத்தவுடன் அப்படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்படம் ரசிகர்களை ஏமாற்றித் தோல்வியை சந்தித்தது.

அதன் காரணமாக கார்த்தியின் மார்க்கெட்டும் சற்று ஆட்டம் கண்டு, கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தார்.

இந்நிலையில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப கார்த்தி ஓர் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

அதன்படி அவர் நடித்த வெற்றிப்படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார்.

வினோத் இயக்கத்தில் வெளியான ‘தீரன்’, மித்ரனின் இயக்கத்தில் வெளியான ‘சர்தார்’, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி 2’ படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க முடிவெடுத்து இருக்கிறார் கார்த்தி.

பல திரைப்படங்கள் இரண்டாம் பாகங்களில் பெரிய அளவில் தோல்வியைச் சந்தித்துள்ளன. எனவே கார்த்தி முன்னெச்சரிக்கையாக முதலில் கதையில் கவனம் செலுத்தவேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இப்படங்களின் இரண்டாம் பாகம் என்றதும் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும். அந்த எதிர்பார்ப்பை கார்த்தி பூர்த்தி செய்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என்கிறது கோலிவுட்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி