சூரியின் மூன்று படங்கள் உலக அளவில் சாதனை

சூரியின் மூன்று படங்கள் உலக அளவில் சாதனை

1 mins read
1e0b347d-1111-4ae4-ab84-7db04f32142a
சூரி, வெற்றிமாறன். - படம்: ஊடகம்

நடிகர் சூரி நடித்திருக்கும் ‘விடுதலை’, ‘கொட்டுக்காளி’ படங்களுடன் ‘ஏழு கடல், ஏழு மலை’ படமும் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.

‘கற்றது தமிழ்’ படத்தின் இயக்குநர் ராம் இயக்கியுள்ள ‘ஏழு கடல், ஏழு மலை’ எனும் படம் மீனவர் மற்றும் அவர்களது வாழ்க்கையைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகி உள்ளது.

இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடித்திருந்த ‘கொட்டுக்காளி’ படமும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்திருந்த ‘விடுதலை’ படமும் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி இருந்தன.

ஒரு நடிகரின் மூன்று படங்களும் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது திரையுலகத்தினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்