‘படம் எங்களுக்கே பயத்தைக் கொடுத்தது’

‘படம் எங்களுக்கே பயத்தைக் கொடுத்தது’

1 mins read
dcafcfd2-37aa-40dc-a402-f3fb08d9b0b6
டிமான்டி காலனி படக்குழுவினர். - படம்: ஊடகம்

‘டிமான்டி காலனி 2’ படத்தைப் பார்க்கும்போது எங்களுக்கே பயத்தைக் கொடுத்தது என்று படத்தின் இசையமைப்பாளர் சாம் கூறியிருக்கிறார்.

விரைவில் வெளியாக இருக்கும் ‘டிமான்டி காலனி 2’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிட்டபோது பேசிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., “ஒரு இரையைத் தவறவிட்ட விலங்கிற்குத்தான் அடுத்த இரையில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டுமென்று தெரியும். ஒரு கலைஞனின் படைப்பு தோற்கலாம்; கலைஞன் தோற்பதில்லை.

“இந்தப் படத்தின் இயக்குநர் அஜய் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். இறுதியாகப் படம் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக இருந்தது. அஜய் கண்டிப்பாக இப்படத்தில் வெற்றி பெறுவார்”.

“இப்படத்தில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்

“இப்படம் எங்களுக்கே பயத்தைத் தருகிறது. ரசிகர்களுக்கு கட்டாயம் இது புதிய அனுபவமாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்