தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராஷ்மிகாவின் பதிவால் காதல் உறுதியானது

1 mins read
9f7a9361-6293-4f94-b6b4-7b51757d046c
ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா - படம்:ஊடகம்
multi-img1 of 2

நடிகை ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் தடம்பதித்து அசத்தி வருகிறார்.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியானது ‘அனிமல்’ படம். விமர்சனங்களைத் தாண்டி இந்தப் படம் உலகளவில் ரூ.800 கோடியை வசூல் செய்து இருக்கிறது. இந்தியாவில் மட்டும் ரூ.500 கோடி வசூல் செய்திருக்கிறது.

சில காலமாகவே ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று ஒன்றாக இருக்கும் படங்களை வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ராஷ்மிகா, “என் வாழ்க்கையில் வந்ததற்கு மிக்க நன்றி,” என்று அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பது தற்பொழுது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

விஜய் தேவரகொண்டாவிற்குத்தான் பதிவிட்டு இருக்கிறார் என்றும் இதன்மூலம் இருவரும் காதலிப்பது உறுதி என்றும் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்