நகைச்சுவைக் கதையில் மணிகண்டன்

நகைச்சுவைக் கதையில் மணிகண்டன்

1 mins read
1c95d518-c7b7-451b-bd38-e45cf3074372
படக்குழுவினருடன் நடிகர் மணிகண்டன். - படம்: ஊடகம்

‘ஜெய் பீம்’, ‘குட்நைட்’ உள்பட பல படங்களில் நடித்தவர் மணிகண்டன். அவர் அடுத்து நாயகனாக நடிக்கும் படத்தை ராஜேஷ்வர் காளிசாமி இயக்குகிறார்.

இந்தப் படத்தில் தெலுங்கில் ‘பிரேம விமானம்’, ‘பித்தா கத்தலு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சான்வி மேக்னா நாயகியாக நடிக்கிறார்.

படம் பற்றி ராஜேஷ்வர் காளிசாமி கூறுகையில், “இந்தக் கதையை சில ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கிவிட்டோம். அண்மையில் ‘குட்நைட்’ படத்தில் நடித்திருந்த மணிகண்டனின் நகைச்சுவைக் கதாபாத்திரம் பலராலும் பேசப்பட்டது. அதனால் இந்த கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவெடுத்தோம்.

“அவருக்கும் கதைப் பிடித்துப் போனதால் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளோம்.

ஒரு நடுத்தர குடும்பத்து இளைஞன் அன்றாடம் அவர் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி நகைச்சுவையாக உருவாகிறது இந்தப் படம்.

“குடும்பப் பின்னணியில் உருவாகும் நகைச்சுவைக் கதை. படம் முழுவதும் கோவையில் எடுக்கப்படுகிறது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி