ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கப்போகும் கமல்

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கப்போகும் கமல்

1 mins read
39e38343-97ab-4899-9aa9-7bf9ea62c98e
மணிரத்னம், வினோத்துடன் கமல். - படம்: ஊடகம்

‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு ஓராண்டாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் எந்தப் படமும் வெளிவரவில்லை.

தற்பொழுது ‘இந்தியன் 2’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கமல் நடித்து வருகிறார். அதோடு நாக் அஸ்வின் இயக்கும் ‘கல்கி 2898 ஏடி’ படத்திலும் நடிக்கிறார்.

இதுதவிர வினோத் இயக்கத்தில் தனது 233வது படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைப்’ படத்திலும் கமல் நடிக்க போகிறார்.

இவற்றில் வினோத் படம் துவங்க தாமதமாகும் என கூறப்பட்டது. ஆனால் அண்மைய தகவல்படி ஒரேநேரத்தில் வினோத் மற்றும் மணிரத்னம் படங்களில் மாறி மாறி கமல் நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மார்ச் மாதத்தில் இருந்து இதன் படப்பிடிப்புகள் துவங்கலாம் என தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்