ரசிகர்கள் தேர்ந்தெடுத்த தலைப்பில் நடிக்கும் பிரபுதேவா

1 mins read
9058e8f1-c651-474a-b92f-0132a176f23d
பிரபு தேவா. - படம்: ஊடகம்

‘சார்லி சாப்ளின்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஷக்தி சிதம்பரம்- பிரபுதேவா இணைந்திருக்கும் ஒரு படத்திற்கு ரசிகர்கள் ‘ஜாலியோ ஜிம்கானா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கூறுகையில், “படத்திற்கு மக்கள் எவ்வாறு தலைப்பைத் தேர்ந்தெடுத்தார்களோ அதுபோலவே இந்தப் படமும் மக்களிடம் சென்றடையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

“இது அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட படம். தயாரிப்பாளர் ராஜேந்திர சோழன் பாடல்கள், சண்டைக் காட்சிகளுக்கு பிரம்மாண்டமான அரங்குகளை அமைத்துக் கொடுத்தார்.

“படத்தின் திரைக்கதையைப் போலவே, பாடல்களும் இசையும் இந்தப் படத்தில் முக்கியமான ஓர் அம்சம். இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி அற்புதமான இசையைக் கொடுத்துள்ளார்.

“பிரபுதேவா, மடோனா, யோகிபாபு, அபிராமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திஆர்.கே.சுரேஷ்