தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சர்தார் 2 படத்திற்கு தயாராகும் கார்த்தி

1 mins read
007302d1-76ab-41e3-a143-e248f9d49d3e
சர்தார் படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். - படம்: ஊடகம்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் சர்தார். அது 2022ஆம் ஆண்டு வெளியானது.

அந்தப் படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். சர்தார் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்நிலையில் தற்போது சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதை பணிகளை முடித்துவிட்ட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் அப்படத்தை இயக்க தயாராகி விட்டார்.

தற்போது நலன் குமாரசாமி இயக்கும் ‘வா வாத்தியாரே’ மற்றும் பிரேம்குமார் இயக்கும் படத்தில் நடித்து வரும் கார்த்தி, இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சர்தார் 2 படத்தில் நடிப்பதற்கு நேரம் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் பாகத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர் நிறுவனமே சர்தார் 2 படத்தையும் தயாரிக்க உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்