ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ‘அயலான்’ படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அயலா அயலா என துவங்கும் இந்த பாடலை விவேக் எழுத, நரேஷ் ஐயர், ரிடே பாடியுள்ளனர். இப்பாடல் இணையவாசிகள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
2024 பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 12ஆம் தேதி அயலான் படம் வெளியாக இருக்கிறது.