தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சூப்பர் ஸ்டாரெல்லாம் சும்மா,சூப்பர் ஆக்டரே சிறப்பு’

1 mins read
1b11c164-1f75-4eca-97bb-28b76e6402a3
நடிகை பார்வதி தமிழ், மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார். - படம்: ஊடகம்

திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களை ‘சூப்பர்ஸ்டார்’ என்று அழைக்கும் வழக்கம் இந்தியாவில் உண்டு.

அண்மையில் தமிழ் திரையுலகின் அடுத்த ‘சூப்பர்ஸ்டார்’ யார் என்ற தலைப்பு மிகப்பெரும் விவாதமாக மாறியது. இது தொடர்பான சர்ச்சை ஓரளவுக்கு ஓய்ந்துள்ள நிலையில், சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து நடிகை பார்வதி கூறிய கருத்துக்கள் இணையத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

“சூப்பர்ஸ்டார் பட்டம் யாருக்கும், எதுவும் தராது. அது நேரவிரயம் மட்டும் தான். என்னை பொறுத்தவரை சூப்பர்ஸ்டார் என்பதை விட ‘நல்ல நடிகர்’ என்று சொல்வதே எனக்கு மகிழ்ச்சி. மலையாளத் திரையுலகில் பகத் பாசில், ஆசிப், ரீமா கல்லிங்கல் ஆகிய மூன்று நல்ல நடிகர்கள் உள்ளனர்,” என்று பார்வதி தெரிவித்தார்.

நடிகை பார்வதி தமிழ், மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார். பூ, மரியான் போன்ற தமிழ் படங்களில் பார்வதியின் கதாப்பாத்திரங்களுக்கு பெரிய அளவில் பாராட்டுகள் குவிந்தன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்