தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தள்ளிப்போகும் ‘தங்கலான்’ படம்

1 mins read
62649d5d-1916-46e3-8d3a-484181e57d03
தங்கலான் படத்தில் விக்ரமுடன், மாளவிகா மோகன், பசுபதி, பார்வதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். - படம்: ஊடகம்

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் வெளியீடு மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.

கோலார் தங்க வயலில், தமிழர்கள் பட்ட துன்பங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

விக்ரமுடன், மாளவிகா மோகன், பசுபதி, பார்வதி திருவோத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், ஜிவி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

படம் முன்னதாக, குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் விக்ரம் தனது 62-வது படத்துக்காக இயக்குனர் எஸ்.யு.அருண்குமாருடன் முதல் முறையாக இணைகிறார். இந்த படத்தை எச்.ஆர். பிக்சர் தயாரிக்கிறது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். அருண்குமார் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கியவர். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்