தமிழில் அறிமுகமாகும் இந்தி நடிகை

தமிழில் அறிமுகமாகும் இந்தி நடிகை

1 mins read
f519c115-83c3-4a6b-8cb0-17561546e25e
ஆகன்ஷா. - படம்: ஊடகம்

கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்த ‘மாயவன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘மாயா ஒன்’ என்ற பெயரில் உருவாகிறது.

சி.வி.குமார் இயக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாகவும் பாலிவுட் நடிகை ஆகன்ஷா ரஞ்சன் கபூர் நாயகியாகவும் நடிக்கின்றனர்.

ஆகன்ஷா ‘கில்தி’ என்ற படத்தில் அறிமுகமாகி ‘மோனிகா ஓ மை டார்லிங்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ‘ரே’ என்ற இணையத் தொடரிலும் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்த இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

குறிப்புச் சொற்கள்