தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏவிஎம் தயாரிப்பில் நடிக்கும் பூஜா ஹெக்டே

1 mins read
45c4a87b-012c-4730-9764-05b6e205cf5c
பூஜா ஹெக்டே. - படம்: ஊடகம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபல ஏவிஎம் நிறுவனம் ஓடிடி தளத்திற்காக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. இதை ‘கோப்ரா’ பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.

நாயகியை முன்னிலைப்படுத்தும் கதையுடன் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு காலத்தில் ஏவிஎம் நிறுவனத்தில் படத்தில் நடிப்பதை நடிகர், நடிகைகள் பெருமையாகக் கருதினர். அந்நிறுவனம் தயாரிக்கும் படம் என்றால் அது மிகத்தரமாக இருக்கும் என்ற பெயர் நிலவியது.

மேலும், குடும்பத்துடன் கண்டு ரசிக்கக்கூடிய வகையிலும் படங்களைத் தயாரித்தது ஏவிஎம் நிறுவனம்.

பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக பட தயாரிப்பிலிருந்து இந்நிறுவனம் ஒதுங்கியே இருக்கிறது. பின்னர் தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரித்து வந்தது.

இந்நிலையில், ஏவிஎம் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பு பூஜா ஹெக்டேவுக்குக் கிடைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்