கைவிடப்பட்ட இளைஞனைப் பற்றிய வாழ்வியல் கதை இது: சீனு ராமசாமி

கைவிடப்பட்ட இளைஞனைப் பற்றிய வாழ்வியல் கதை இது: சீனு ராமசாமி

1 mins read
0e53be82-28c6-48da-83ba-bdbf698526da
‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

தரமான கதைகளைப் படமாக்கும் இயக்குநர்களில் சீனு ராமசாமியும் ஒருவர். அவரது இயக்கத்தில் உருவாகும் புதுப்படம் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’.

இம்முறை புதுமுகங்களுடன் களமிறங்கி உள்ளார். ஏகன், திரிகிடா ஆகிய இருவரையும் அறிமுகம் செய்கிறார்.

மேலும் யோகிபாபு, ஐஸ்வர்யா தத்தா, மானஸ்வி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ரகுநந்தன் இசையமைக்க, அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இது கிராமத்து மண் சார்ந்த, ஒரு கைவிடப்பட்ட இளைஞனைப் பற்றிய வாழ்வியல் கதை.

காதல் சித்திரமாய், விறுவிறுப்பான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும் வகையில் தயாராகிறது.

“தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த உள்ளோம். ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்து குறித்த தேதியில் வெளியிட வேண்டும் என்பதே எங்கள் திட்டம்,” என்கிறார் இயக்குநர் சீனுராமசாமி.

அண்மையில் வெளியீடு கண்ட ‘ஜோ’ படத்தை தயாரித்த விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

குறிப்புச் சொற்கள்