போண்டா மணி காலமானார்

1 mins read
158a0560-c005-47b4-b912-65e62cd53a85
போண்டா மணி. - படம்: ஊடகம்

நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 60.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், 1991ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கிய ‘பவுனு பவுனுதான்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 150க்கும் அதிகமான படங்களில் நடித்த அவர் சில காலமாக சிறுநீரகப் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், தன் வீட்டில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தார் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்