மூன்று வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் படம்

மூன்று வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் படம்

1 mins read
73b3396e-7930-4b3d-9fe8-93a27a18a2d3
‘ஈரப்பதம் காற்று மழை’ படக் கலைஞர்கள். - படம்: ஊடகம்

அறிமுக இயக்குநர் சலீம் பாட்ஷா இயக்கத்தில் உருவாகி உள்ளது ‘ஈரப்பதம் காற்று மழை’.

இதில் வெற்றி, கிஷன்தாஸ், கீர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். ஸ்ரீராம் வெங்கடேஷ் இசை அமைத்துள்ளார்.

மூன்று வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்த வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் படம் இது என்கிறார் இயக்குநர் சலீம் பாட்ஷா.

வழக்கமான கதை சொல்லும் பாணியில் இருந்து விலகி நின்று மாறுபட்ட வகையில் கதையை விவரித்துள்ளாராம். மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான அம்சங்களும் விவரிக்கப்பட்டுள்ளதாம்.

“வாழ்க்கை ஒருவர் மீது எந்த அளவுக்கு கொடூரமாகவும் அதே சமயம் எப்படி கனிவாகவும் இருக்கிறது என்பதை இப்படம் உணர்த்தும்,” என்கிறார் சலீம் பாட்ஷா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்