குற்றச் சம்பவங்களின் பின்னணியில் நடக்கும் கதை

குற்றச் சம்பவங்களின் பின்னணியில் நடக்கும் கதை

1 mins read
4e7baead-dfaa-4906-b8fa-07df6687880f
‘பூகம்பம்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

பிரபல கராத்தே வீரர் இஷாக் ஹூசைன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘பூகம்பம்’. படத்தின் தயாரிப்பாளரும் அவர்தானாம்.

தில்சானா, ஹேமா, ரிஷ்வத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தாமஸ் ரத்தினம் இசையமைத்துள்ளார்.

இந்தப்படம் குற்றச் சம்பவங்களின் பின்னணியில் நடப்பவற்றை வைத்து உருவாகிறது.

“பிச்சை எடுப்பதில் பல வகைகள் உண்டு. அவற்றுள் தேர்தல் பிச்சையைப் பற்றி இந்தப்படம் அலசும். தமிழகத்திலும், பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளோம். குறிப்பாக போலந்து நாட்டில் அதிக நாள்கள் படப்பிடிப்பை நடத்தினோம்.

“ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் விடமாட்டேன் என்பதுதான் நாயகனின் கொள்கை. அதை அடிக்கடி சொல்லி கதாநாயகிக்கும் வில்லனுக்கும் இடையில் நடக்கும் எனது அதிரடி ஆட்டம் சுவாரசியமாக இருக்கும். இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் நல்ல அனுபவம் பெற்றுள்ளேன்,” என்கிறார் இஷாக் ஹூசைன்.

குறிப்புச் சொற்கள்