பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ்; பின்னணி இசைக்கு ரேவா

பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ்; பின்னணி இசைக்கு ரேவா

1 mins read
fb3a8c42-4d83-4598-8c66-26d977dcfdc9
‘கள்வன்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ், இவானா. - படம்: ஊடகம்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கள்வன்’. பி.வி.சங்கர் இயக்கியுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நாயகியாக நடித்துள்ளார் இவானா.

மேலும் திவாகர், பிரசன்னா பாலசந்திரன், நிவேதிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்க, பின்னணி இசைப் பணியை ரேவாவிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவர் தற்போது ஹங்கேரி நாட்டில் தங்கியுள்ளார். அங்கிருந்தபடியே பின்னணி இசை கோப்பு பணியைக் கவனித்து வருகிறாராம். ‘இந்த படத்திற்கு பின்னணி இசையை வழங்குவது மிகவும் சவாலானது. இந்த வாய்ப்பின் மூலம் பல்வேறு ஆக்கபூர்வமான அம்சங்களைக் கற்றுக் கொண்டேன்.

“உணர்வுபூர்வமான கதைக்களம் என்பதால் அதற்கேற்ற இசையை வழங்கியுள்ளோம்.

“எனது இசை ரசிகர்களுக்கு எந்த அளவு பிடித்து இருக்கிறது என்பதை அறிய ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்,” என்கிறார் இசையமைப்பாளர் ரேவா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்