காதலர் தினத்தன்று வெளியாகும் ’லவ்வர்’

காதலர் தினத்தன்று வெளியாகும் ’லவ்வர்’

1 mins read
a901826e-f3ee-4057-9fa4-c882acbf7359
‘லவ்வர்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

‘குட் நைட்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் மணிகண்டன் ‘லவ்வர்’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

அறிமுக இயக்குநர் பிரபு ராம் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியீடு காண உள்ளது.

சான் ரோல்டன் இசையமைக்கும் இந்தப் படத்தில் கௌரி ப்ரியா ரெட்டி, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிகண்டனுக்குத் தற்போது நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. கைவசம் ஐந்து படங்களை வைத்திருப்பதாகத் தகவல். கூடுமானவரை நல்ல கதைக்களங்களைத் தேர்வு செய்து நடிக்கிறார்.

அதேவேளை, வணிக அம்சங்கள் நிறைந்த அடிதடிப் படங்களில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கவும் விரும்புகிறார்.

இந்த ஆசை அடுத்த ஆண்டிலாவது நிறைவேறும் என நம்புகிறாராம். வணிக அம்சங்கள் நிறைந்த சில கதைகளைக் கேட்டுள்ளதாகவும் அவற்றுள் நல்ல கதையைத் தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்