தனுஷின் அர்ப்பணிப்பு; வாழ்த்திப் பாராட்டும் சூர்யா

1 mins read
cb7e379e-94a9-4867-b647-ed60b64cfc07
தனுஷ், எஸ்.ஜே.சூர்யா. - படம்: ஊடகம்

தனுஷ் மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல. அருமையான இயக்குநரும் கூட என்று எஸ்.ஜே. சூர்யா பாராட்டி உள்ளார்.

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“படங்களை இயக்குவதில் தனுஷுக்குத்தான் என்ன வெறி, எத்தகைய அர்ப்பணிப்பு! அவரது ஐம்பதாவது படத்தின் கதையும் அதை படமாக்கியுள்ள விதமும் உலகத் தரத்தில் உள்ளது,” என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இந்த தலைப்பு அருமையாக உள்ளது என அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்