மூன்று நாள்களில் ரூ.400 கோடி வசூலித்த ‘சலார்’

மூன்று நாள்களில் ரூ.400 கோடி வசூலித்த ‘சலார்’

1 mins read
c10b9828-ecbf-43dc-9b6a-49287cb31faa
‘சலார்’ படத்தில் பிரபாஸ். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘சலார்’ திரைப்படம் வெளியீடு கண்ட மூன்று நாள்களில் 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் ரூ.250 கோடி வசூலானதாகவும் வெளிநாடுகளில் ரூ.150 கோடி வசூல் ஆகி உள்ளது என்றும் கூறப்படுகிறது.

தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியீடு கண்ட இப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்கிறார்கள்.

மேலும், மூன்று நாள் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்புத் தரப்பு வெளியிட்டுள்ள தகவல்களையும் சிலர் ஏற்க மறுக்கிறார்கள்.

படம் வசூல் ரீதியில் தோல்வி அடைந்துவிட்டதாக அறிவித்தால் பிரபாஸ் நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் வியாபாரம் பாதிக்கப்படும் என்றும் அதை மனதிற்கொண்டே பொய்யான தகவல்கள் வெளியிடப்படுகின்றன என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்