அஸர்பைஜானில் அஜித், பாவனா ‘அசல்’ சந்திப்பு

அஸர்பைஜானில் அஜித், பாவனா ‘அசல்’ சந்திப்பு

படம்: எக்ஸ் / காணொளிப் படம்

26 Dec 2023 - 8:31 pm

1 mins read

பாக்கு (அஸர்பைஜான்): அஜித் குமாரின் அடுத்த படமான ‘விடாமுயற்சி’யின் படப்படிப்பு அஸர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் இணைந்து நடித்த பாவனாவை அந்நாட்டில் சந்தித்திருக்கிறார் ‘தல’. இருவரும் சந்தித்த காட்சி பதிவான காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அஜித், பாவனா இருவரும் 2010ஆம் ஆண்டு வெளிவந்த ‘அசல்’ படத்தில் இணைந்து நடித்தனர்.

‘விடாமுயற்சி’க்காக அஜித்தைப் போல் பாவனா நடித்துவரும் ‘பிங்க் நோட்’ எனும் கன்னடப் படத்துக்கான படப்பிடிப்பும் அஸர்பைஜானில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் தயாராகிவரும் ‘விடாமுயற்சி’யில் அஜித் இரண்டு வேடங்களில் அசத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரி‌ஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாந்திரா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திஅஜித்திரைப்படம்திரையுலகம்