இன்று மாலை ‘வெலகாத’ பாடல் காணொளி வெளியீடு

1 mins read
faf340c1-30b5-4e34-99fe-e090eb8f3af2
மணிகண்டன். - படம்: ஊடகம்

‘ஜெய் பீம்’ படம் மூலம் பலருக்கும் தெரிந்த நடிகரான மணிகண்டன் நடித்திருக்கும் ‘லவ்வர்’ படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது.

அண்மையில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான ‘குட் நைட்’ திரைப்படத்தில் மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் மணிகண்டன் நடித்து பலரையும் கவர்ந்தார்.

இவர் தற்போது அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள ‘லவ்வர்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘வெலகாத’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக நடிகர் மணிகண்டன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். ‘லவ்வர்’ திரைப்படம் 2024ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்