தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தூத்துக்குடியில் முகாமிட்டு இருக்கும் ரஜினி

1 mins read
f282d743-7d96-44c4-ba3b-69476ad2aee1
ரஜினிகாந்த். - படம்: ஊடகம்

ரஜினி நடித்துக்கொண்டு இருக்கும் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பிற்காக தூத்துக்குடிக்குச் சென்று இருக்கிறார்.

‘ஜெய்பீம்’ பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தில் ரஜினி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘வேட்டையன்’ படத்தின் தலைப்பு மற்றும் முன்னோட்டக் காட்சி ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டம் வாகைக்குளம் விமான நிலையத்தில் இறங்கி அதன் பின்னர் ஆரல்வாய்மொழிக்கு சென்றுள்ளார். ஏற்கெனவே படக்குழுவினர் அங்கு சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி