‘கேப்டன் மில்லர்’ படம் பற்றிய முக்கியத் தகவல்

1 mins read
fd7939ba-38b8-479d-85e7-c05df0b00e0d
தனுஷ். - படம்: ஊடகம்

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் நேரம் 2 மணி நேரம் 40 நிமிஷங்கள் என்று அறிவுத்துள்ளது படக்குழு.

அருண் மாதேஸ்வரன் தனுஷின் அண்ணன் செல்வராகவனை வைத்து ‘சாணிக்காயிதம்’ என்ற படத்தினை இயக்கி இருந்தார்.

இந்நிலையில் அண்ணனை இயக்கிய கையோடு தற்போது அவரது தம்பி தனுஷை இயக்கி வருகிறார் அருண் மாதேஸ்வரன்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடந்து வந்தன. பெரும் பொருட் செலவில் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளதால் படம் ஓடும் நேரத்தை அறிவித்து உள்ளது படக்குழு. இருந்தாலும் இன்னும் தணிக்கைக்கு செல்லாததால் மேலும் நேரம் குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திதனுஷ்