அமெரிக்காவில் விஷால் தன்னைப் படம் பிடித்தவரிடம் இருந்து முகத்தை மூடிக்கொண்டு அவருடன் வந்த பெண்ணையும் இழுத்துக்கொண்டு தலைதெறிக்க ஓடியிருக்கிறார்.
விஷால் தற்பொழுது இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரத்னம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஷால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு நியூயார்க் நகரத்தில் இளம்பெண் ஒருவருடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது ஒருவர் தங்களைக் காணொளி எடுப்பதை பார்த்து பதறிப்போன விஷால் முகத்தை மறைத்துக்கொண்டு அந்த பெண்ணுடன் தலைதெறிக்க ஓடிய காணொளி வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.
இதைப்பார்த்த வலைத்தளவாசிகள் அந்தப் பெண் விஷாலின் காதலியா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.