‘ஜவான்’ படத்தால் அட்லிக்கு அடித்தது அதிர்ஷ்டம்

1 mins read
f90c6730-0106-4248-9945-e95f30d06500
ஷாருக்கான், அட்லி. - படம்: ஊடகம்

‘ஜவான்’ படத்தின் மாபெரும் வெற்றியால் இயக்குநர் அட்லிக்கு ரூ.50 கோடி சம்பளம் தர தயாராக உள்ளன பல தயாரிப்பு நிறுவனங்கள்.

இயக்குநர் அட்லி இறுதியாக ‘ஜவான்’ படத்தை ஷாருக்கானை வைத்து இயக்கி இருந்தார். இப்படம் உலகளவில் ரூ.1,000 கோடி வசூலைக் கடந்தது. இதனால் அட்லிக்கு ரூ.50 கோடி வரை சம்பளம் தர தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக உள்ளன.

அட்லியின் அடுத்த படத்தில் விஜய், ஷாருக்கான் போன்ற நடிகர்களுடன் கைகோர்பார் என கூறப்பட்டு வந்த நிலையில் அட்லி இயக்கும் புதிய படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படப்பிடிப்பு முடிந்த பிறகு இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்