தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜய்யுடன் இணையும் ‘ராஜமாதா’

1 mins read
66f7357c-a102-4c26-9b5e-54e7e0e71a48
ரம்யா கிருஷ்ணன். - படம்: ஊடகம்

விஜய் நடிக்கும் அவரது 68வது படத்தில் ரம்யா கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் விஜய்யின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தாய்லாந்து, துருக்கி, ஹைதராபாத் என பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் அவருடன் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, இவானா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், ரம்யா கிருஷ்ணனும் இப்படத்தில் இணைந்துள்ளார். இந்தத் தகவலை ராஜமாதாவாக நடித்து புகழ்பெற்ற ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதற்கு முன்பு ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்